இவர் தொடக்க வீரரே கிடையாது பா..! மிடில் ஆர்டர் தான் BEST ; இனிமேல் தான் ஆட்டமே இருக்கு ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகின்றனர்.

நேற்று ஸ்ரீ பங்களா மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல் தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதுமட்டுமின்றி, இந்த முறை வலது இடது கை பேட்ஸ்மேன் என்ற நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் களமிறங்கினர்.

ஆனால் வழக்கம் போல சொதப்பல் தான் மிஞ்சியது. முதல் நான்கு விக்கெட்டை சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறியது இந்திய. பின்பு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட்டை அணி 41.2 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் ரோஹித் சர்மா 27, ஷிகர் தவான் 7, விராட்கோலி 9, ஸ்ரேயாஸ் ஐயர் 24, கே.எல்.ராகுல் 73, வாஷிங்டன் சுந்தர் 19, ஷர்டுல் தாகூர் 2 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி.

இந்திய அணியை காட்டிலும் தொடக்க ஆட்டம் பங்களாதேஷ் அணிக்கு சிறப்பாக அமைந்தது. இருந்தாலும் விக்கெட்டை இழந்த பங்களாதேஷ் அணி இறுதி நேரத்தில் ரன்களை அடிக்க முடியாமல் திணறியது. ஆனால் மெஹிடி ஹசன் மிராஸ் சிறப்பாக விளையாடி பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு காரணமாக மாறினார். 46 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த பங்களாதேஷ் அணி 187 ரன்களை அடித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது இந்திய.

மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் :

சமீபத்தில் நடையிற்று முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுலின் ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. இந்திய அணியின் தோல்விக்கு அவரது பேட்டிங்-கும் முக்கியமான காரணம் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இனிமேல் அவர் இந்திய அணியில் விளையாடவே வேண்டாம் என்று பல விமர்சனங்களும் எழுந்தன.

ஆனால் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தாலும், கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியிக்கு ரன்கள் சேர்ந்தன. 70 பந்தில் 73 ரன்களை விளாசினார் கே.எல்.ராகுல், அதில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

அதனால் இவர் (கே.எல்.ராகுல்) மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒருவேளை ரிஷாப் பண்ட் இடம்பெற்றால் நிச்சியமாக கே.எல்.ராகுல் இடத்திற்கு பிரச்சனை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here