நான் இதை தான் செய்ய ஆசைப்படுகிறேன் ; ஆனால் முடியவில்லை ; இஷான் கிஷான் வருத்தம் ;

0

நேற்று நடந்த போட்டியின் விவரம் :

நேற்று மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம் போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 158 ரன்களை அடித்தனர்.

அதில் ஜோஸ் பட்லர் 67, படிக்கல் 15, மிச்சேல் 17, அஸ்வின் 21 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. வழக்கம் போல ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் தொடக்க ஆட்டத்தை சிறப்பாக விளையாடவில்லை.

இருப்பினும் சூரியகுமார், திலக் வர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர் முடிவில் 161 ரன்களை அடித்தனர். அதனால் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புள்ளிபட்டியல் விவரம் :

ஐபிஎல் 2022 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மறக்க முடியாத ஒரு சீசன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 1 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, முதல் 8 போட்டிகளில் தோல்வி பெற்ற முதல் அணியும் மும்பை இந்தியன்ஸ் தான்.

2 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது மும்பை. இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 போட்டிகள் மட்டுமே மிதமுள்ளன. அதில் அனைத்திலும் வெற்றி பெற்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்குமோ ?

இஷான் கிஷான் பேட்டி :

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷானை 15.25 கோடி விலை கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் நேற்று நடந்த போட்டியில் இஷான் கிஷான் 18 பந்தில் 26 ரன்களை அடித்துள்ளார். போட்டியை பற்றி பேசிய இஷான் கிஷான் கூறுகையில் :

“இந்த ஆண்டு எங்களுக்கு சற்று கடுமையான ஆண்டாக தான் உள்ளது. இதே அணியை நாங்கள் முடிந்த வரை அனைத்து போட்டிகளிலும் வைத்திருக்க வேண்டும். ஆமாம், முதல் சில போட்டிகளில் நாங்கள் வெற்றி பெறவில்லை தான், ஆனால் நாங்கள் முயற்சி மிகவும் சிறப்பான ஒன்று தான்”.

“ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரே எண்ணம் தான் இருக்கும். எப்படியாவது ஒரு அணியை இறுதிவரை விளையாடி வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக என்னுடைய எண்ணம் ஒன்று தான், பவர் ப்ளேவில் முடிந்த வரை பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்பது தான்.”

அப்பொழுது தான் எனக்கு பின்னால் விளையாடும் வீரர்களுக்கு சற்று சுலபமாக இருக்கும். எங்களுக்கு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த சீசனை கடினமாக மாற்ற வேண்டும் என்பது தான்.வெற்றி பெற்ற இந்த போட்டியை மறந்துவிட்டு இனிவரும் பேட்டிகளில் எப்படி விளையாட போகிறோம் என்பதை தான் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இஷான் கிஷான்.”

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை இஷான் கிஷானை தொடக்க வீரராக அறிமுகம் செய்தது சரியா ? தவறா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here