கூடிய விரைவில் இவரை CSK அணியில் பார்க்கலாம் ; இதனால் தான் இவ்வளவு போட்டிகளில் இவர் விளையாடவில்லை ; பிளெம்மிங் ஓபன் டாக் ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்னர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேப்பை பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது சீசன் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் 2022 : மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2022யில் இதுவரை வெற்றிகரமாக 39 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த முறை இரு புதிய அணிகள் அறிமுகம் ஆன காரணத்தால் ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இதுவரை அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெட்ரா அணியும் சென்னை அணி தான். அதுமட்டுமின்றி, இதுவரை மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது சென்னை.

ஆனால் இந்த ஆண்டு ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இதுவரை சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. சென்னை அணி ஏலத்தில் சில தவறுகளை செய்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் சில தகவல் வெளியாகி வருகிறது.

இருப்பினும் அண்டர் 19 உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ராஜேவர்தன் ஹங்காரகேகர் சென்னை அணியின் ப்ளே யிங் 11ல் ஏன் இன்னும் அவரை விளையாட வைக்கவில்லை என்று பல கேள்விகள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைகையில் ஸ்டீபன் பிளெம்மிங் சில தகவல் கூறியுள்ளார்.

அதில் ” ப்ளேயிங் 11 ல் விளையாட வைப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஏனென்றால் ஒரு போட்டியில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அது அந்த 11 பேருக்கு தான் கிடைக்கும். அதுமட்டுமின்றி, ராஜவர்தன் ப்ளேயிங் 11ல் விளையாட வைப்பது ஒன்று பிரச்சனை இல்லை.”

“ஆனால் அவரை களமிறங்க வைப்பதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. அதிலும், சும்மா அவரை அணியில் விளையாட வைத்து அவரை காயப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அவர் இப்பொழுது தான் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.”

“அதனால் அவருக்கு சில நேரங்கள் ஆகும், அதனை விட்டுவிட்டு சும்மா ப்ளேயிங் 11ல் களமிறங்கி அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அது அவருக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான நேரத்திற்க்காக காத்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெம்மிங்.”