ஐபிஎல் 2022:
ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் நேற்று நடந்த 44வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்றது.
44வது போட்டியின் விவரம் :
நேற்று இரவு நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதுமட்டுமின்றி, அதிரடியாக விளையாடும் ஜோஸ் பட்லருக்கு நேற்று சற்று தயக்கமாகவே விளையாடி வந்தார்.
அதனால் இறுதி ஓவர் வரை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 158 ரன்களை அடித்தது. அதில் ஜோஸ் பட்லர் 67, படிக்கல் 15, சஞ்சு சாம்சன் 16, மிச்சேல் 17, ஹெட்மேயேர் 6,ரியன் பராக் 3, அஸ்வின் 21 ரன்களை அடித்துள்ளனர்.
மும்பை அணியின் இலக்கு :
159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம் போல தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. இருப்பினும் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர் முடிவில் 161 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது.
இதுதான் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற ஐபிஎல் டி-20 2022யின் முதல் வெற்றியாகும். இனிவரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றாலும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை…!
ரோஹித் சர்மா பேட்டி :
போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; ” எனக்கு தெரிந்து இன்று தான் சரியாக விளையாடியுள்ளோம், அதிலும் குறிப்பாக பவுலிங்கில் பட்டைய கிளம்பிட்டோம். தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றினால் நிச்சியமாக அணிக்கு அழுத்தம் ஏற்படும்.”
“அதனை தான் எதிர் அணிக்கு (ராஜஸ்தான் ராயல்ஸ்) செய்தோம். இந்த அணியை வைத்துதான் முதல் சில போட்டிகளில் விளையாடினோம், அதில் ஒரு சில பவுலிங் மட்டும் மாற்றாக இருந்தது. இந்த சீனில் நடந்த விசையத்தை பார்த்தால், அணியின் சரியான காம்பினேஷன் எது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.”
“அதுமட்டுமின்றி, நாங்கள் தோல்வி பெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட வெற்றியின் பக்கத்தில் வந்து தான் தோல்வியே நாங்கள் பெற்றுள்ளோம். அந்த போட்டிகளில் வென்றிபெற்றிருந்தால் நிச்சியமாக மாற்றமாக இருந்திருக்கும். அதுமட்டுமின்றி, பவுலர் (ஹர்டிக் மற்றும் கார்த்திகேய) ஆகிய இருவரின் பவுலிங் மிகவும் நம்பிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.”
“அவர்களிடம் இருக்கும் நம்பிக்கை தான் ஏதாவது புதிதாக செய்ய ஆர்வத்தை தூண்டுகிறது. அதனால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் இவர்கள் இருவரது பவுலிங் பயனாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா..!”