இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் ; தோல்விக்கு இதுதான் காரணம் ; டூப்ளஸிஸ் ஓபன் டாக்

0

ஐபிஎல் 2022 போட்டிகள் நாளை இரவுடன் நிறைவு பேர் போகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் யார் இந்த முறை கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.

Qualifier 2: நேற்று அஹமதாபாத்-ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின…..!

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர். அதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 157 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதில் விராட்கோலி 7, டூப்ளஸிஸ் 25, ரஜத் படிடர் 58, மேக்ஸ்வெல் 24, லொம்ரோர் 8, தினேஷ் கார்த்திக் 6, அஹமத் 12 ரன்களை அடித்தனர். பின்பு 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. தொடக்க வீரரான ஜோஸ் பட்லரின் சதம் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

ஏனென்றால் வெறும் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 18.1 ஓவர் முடிவில் 161 ரன்களை அடித்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதில் ஜெய்ஸ்வால் 21, ஜோஸ் பட்லர் 106, சஞ்சு சாம்சன் 23, படிக்கல் 9, ஹெட்மயேர் 2 ரன்களை அடித்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளஸிஸ் கூறுகையில் ; ” நாங்க பேட்டிங் செய்த பின்னர் பீல்டில் இருந்து வெளியேற வரும்போது எங்களுக்கு திருப்தி இல்லை. அதுமட்டுமின்றி பேட்டிங் செய்யும்போது முதல் நான்கு ஓவர்கள் கடினமாக இருந்தது. “

“180 ரன்கள் அடித்திருந்தால் சரியாக இருந்திருக்கும். அதுமட்டுமின்றி ஏதோ டெஸ்ட் போட்டி போல நாங்கள் சிக்ஸர் அடித்தோம் நீண்ட நேரம் கழித்து.இருப்பினும் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு சிறப்பாக தான் சென்றது. எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ரசிகர்களுக்கும் நன்றி.”

“ஹர்ஷல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய போட்டி சற்று வருத்தமாக தான் உள்ளது. எங்கள் அணியில் பல திறமையான இளம் வீரர்கள் உள்ளனர்.”

“அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடி வந்துள்ளனர். நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here