இவர் என்ன ஏதோ 10 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது போல விளையாடி வருகிறார் ; ரவி சாஸ்திரி பாராட்டு ;

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு குறைவான ஓவர் போட்டிகள் என்றால் மிகவும் பிடித்துள்ளது. அதனால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 14 சீசன் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்த ஆண்டு 15 வது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிகமபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 சீசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளனர்..!

ஆனால் இந்த ஆண்டு இந்த மூன்று அணிகளும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவேயில்லை. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 207 ரன்களை விளாசினார்கள்.

அதில் ரஜத் படிடர் அதிரடியாக விளையாடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடினார். அதனால் லக்னோ அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. ஆனால் லக்னோ அணி முடிந்த அவரை போராடிய போராடிய நிலையில் 193 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பெங்களூர் அணி.

அதற்கு முக்கியமான காரணம் பெங்களூர் அணி தான். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவியோ சாஸ்திரி கூறுகையில் ; “ரஜத் போல விளையாடினால் அது நிச்சியமாக சிறப்பாக ஒரு விஷயம் தான்…! அதுவும், அனுஜ்-க்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்ட வீரர் விளையாடுவது இதுவே முதல் முறை.”

“அவரது ஷாட்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. அதுமட்டுமின்றி, அவர் அடித்த அதிரடியான ஆட்டம் எதிர் அணியை கலங்கவைத்தது தான் உண்மை. அவர் மிகவும் சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியை வெற்றிபெற வைத்துள்ளார். ஆனால் லக்னோ அணியின் பக்கத்தில் இருந்து பார்த்தால்,

அவர்களுக்கு அவர்களே உதவியாக இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், சரியாக Catch பிடிக்காதது தான் முக்கியமான காரணமாக உள்ளது. ஆனால் போட்டி என்று இருந்தால் இப்படியெல்லாம் நடக்க தான் செய்யும். ஆனால் படிடர் அற்புதமாக விளையாடி விட்டார் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி..!