தலைவன்..! எப்பையுமே தலைவன் தான் ; விராட்கோலி இப்படி சொன்னதால் தான் என்னால் சதம் அடிக்க முடிந்தது ; இஷான் கிஷான் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் பங்களாதேஷ் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை வென்றுள்ளனர்.

நாளை மறுநாள் முதல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

ஒருநாள் போட்டிக்கான தொடரின் விவரம் :

முதல் போட்டியில் மோசமான நிலையில் தோல்வியை பெற்றது இந்திய. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடினமாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பங்களாதேஷ் அணி. ஆனால் மூன்றாவது போட்டி யாருமே எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்திய.

அதில் காயம் காரணமாக ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் இளம் வீரரான இஷான் கிஷான்-க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட இஷான் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து பங்களாதேஷ் அணியை திணறிடித்துள்ளார் இஷான். கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார் இஷான் கிஷான். தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய இஷான் கிஷான் களமிறங்கினார்.

ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தும், அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் திணறினார் இஷான் கிஷான். பின்பு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இஷான் கிஷான் 131 பந்தில் 210 ரன்களை விளாசினார். அதில் 10 சிக்ஸர் மற்றும் 24 பவுண்டரிகள் அதில் அடங்கும்.

சமீபத்தில் இஷான் கிஷான் அளித்த பேட்டியில் ; “நான் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் என்னை நிதானமாக விளையாட சொன்னது விராட்கோலி தான். அதுமட்டுமின்றி, நான் சிக்ஸர் அடித்து சதம் அடிக்காமல் என்று முடிவு செய்தேன். ஆனால் அப்பொழுது விராட்கோலி என்னிடம், வேண்டாம் வேண்டாம் இது உன்னுடைய முதல் சதம் அதனால் பொறுமையாக விளையாடு என்று கூறியுள்ளார் இஷான் கிஷான்.”

இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் தான் மோசமான நிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது ஆசிய மற்றும் உலகக்கோப்பை போட்டியில் மோசமான நிலையில் வெளியேறியுள்ளது இந்திய. அதற்கு தொடக்க வீரர்களின் மோசமான பார்ட்னெர்ஷிப் தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இனிவரும் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் போன்ற இருவரின் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமையும ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here