விராட்கோலி, ரோஹித் இல்லை ; டெஸ்ட் போட்டிக்கான கேப்டனை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி ; மறுபடியும் இவர ?

0

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது பங்களாதேஷ் அணி.

டெஸ்ட் போட்டிக்கான தொடர் :

வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி முதல் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது இந்திய.

இந்திய அணியின் விவரம் :

கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்டுல் தாகூர், முகமத் சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவதீப் சைனி, சவுரப் குமார், ஜெயதேவ் உனட்கட்.

ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் தோல்வி தோல்வி பெற்றுள்ள நிலையில் டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று தீவிரமான பயிற்சி எடுத்து வருகின்றனர். ரோஹித் சர்மா-விற்கு இரண்டாவது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் கையில் பலமாக அடிபட்டுவிட்டது. அதனால் மூன்றாவது போட்டியில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிக்கான தொடரிலும் விளையாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ரோஹித்.

அதனால் விரைவாக முடிவு செய்த இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக கே.எல்.ராகுலை அறிவித்துள்ளது பிசிசிஐ. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியால் தொடரை வெல்ல முடியுமா ? அவரால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியுமா ? ஏனென்றால் கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணி மோசமான நிலையில் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது.

இறுதியாக கே.எல்.ராகுல் விளையாடிய 10 இன்னிங்ஸ்-ல் 9, 44 – 38, 13 – 6, 84 – 26, 129 -5, 0 – 8, 17 – 46, 123 – 23, 50 – 8, 12 – 10 ரன்களை அடித்துள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக கே.எல்.ராகுல் இருந்தால் இந்திய கிரிக்கெட் அணியால் வெல்வதற்கான வாய்ப்பு இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே COMMENTS பண்ணனுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here