சூரியகுமார் இல்லை ; இந்திய அணியில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட கூடிய ஒரே வீரர் இவர் மட்டும் தான் ;

0

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரையும் வென்றுள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் 3 ரன்களை அடித்துள்ளனர். அதனால், அதனை அடுத்து இஷான் கிஷான் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களுது பார்ட்னெர்ஷிப் பங்களாதேஷ் அணிக்கு ஆபத்தாக மாறியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 409 ரன்களை அடித்துள்ளது இந்திய.

அதில் இஷான் கிஷான் 210, விராட்கோலி 113 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். சிறப்பான கம்பேக் கொடுத்த விராட்கோலி. கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் இறுதியாக சதம் அடித்துள்ளார் விராட்கோலி. அதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு விராட்கோலி இப்பொழுது தான் சதம் அடித்துள்ளார். இதுவரை விராட்கோலி மொத்தம் 73 சதம் அடித்துள்ளார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கூறுகையில் : “சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் செய்த சாதனையை போல வேறு யாராலும் அவ்வளவு எளிதாக அடிக்க முடியாது. இஷான் கிஷான் செய்ததை போல நிச்சியமாக மற்ற வீரர்கள் செய்ய முடியும். ஆனால் விராட்கோலி அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்திய அணியில் விராட்கோலி மட்டும் தான் தொடர்ச்சியாக விளையாட கூடிய வீரர்” என்று கூறியுள்ளார் அஜய் ஜடேஜா.

மேலும் இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் : “எனக்கு தெரிந்து இஷான் கிஷானுடைய பேட்டிங் நிசியாமாக விராட்கோலி-க்கு உதவியாக இருந்திருக்கும். தொடக்கத்தில் இருந்து இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி கொண்டு வந்தார். அதனால் விராட்கோலி-க்கு அழுத்தம் குறித்த காரணத்தால் விராட்கோலி-யால் சிறப்பாக விளையாட முடிந்துள்ளது.”

விராட்கோலி இதுவரை விளையாடிய நிலையில் டெஸ்ட் போட்டியில் 27 சதமும், ஒருநாள் போட்டியில் 44 சதமும், டி-20 போட்டியில் 1 சதமும் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்துள்ளது ஆசிய கோப்பையில் இருந்து விராட்கோலியின் பங்களிப்பு அதிகரித்துள்ளது தான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here