இவர் அணியில் இருக்கிறார், அதனால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் இவரிடம் தான் பேசுவேன் ; ஹார்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகளில் அறிமுகம் ஆன அணிதான் குஜராத் டைட்டன்ஸ் அணி. அதிகபட்சமாக 10 போட்டிகளில் வென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ். அதுமட்டுமின்றி, யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் கம்பேக் கொடுத்துள்ளார்.

ஏனென்றால் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு சரியாக எந்த சீரியஸ் போட்டிகளும் கலந்துகொள்ளாத ஹார்டிக் பாண்டிய, ஐபிஎல் 2022 போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருகிறார். இதுவரை, 12 போட்டிகளில் விளையாடி 351 ரன்களை அடித்துள்ளார்.

அதிலும் அதிகபட்சமாக 87 ரன்களை ஆட்டம் இழக்காமல் அடித்துள்ளார். அதேபோல, பவுலிங் செய்தும் 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஹார்டிக் பாண்டிய. ஐபிஎல் 2022யில் ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி திகழ்கிறது.

ஏனென்றால் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 10 போட்டியில் வென்று, 20 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் ஹார்டிக் பாண்டிய அளித்த பேட்டியில் ; ” இன்றைய போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், கையில் 7 விக்கெட் மீதமுள்ள நிலையில் வெற்றியை கைப்பற்றியது மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறினார் ஹார்டிக்.”

மேலும் கேப்டன் பதவியை பற்றி பேசிய ஹார்டிக் பாண்டிய :” நான் இந்த ஆண்டு முன்பு விளையாடிய அணியில் பல பொறுப்புகள் எனக்கு இருந்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரராக அணியில் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றியுள்ளேன். அந்த மாதிரியான பொறுப்பை நான் சந்தோசமாக அனுபவித்து கொண்டு வருகிறேன்.”

“நான் பேட்டிங் செய்ய தொடங்கிய போது விளையாட்டின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல, நான் பவுலிங் செய்யும்போது எந்த நேரத்தில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்கு புரிந்துள்ளது. அதுமட்டுமின்றி, எனக்கும் அணியில் இருக்கும் அஷிஸ் நெஹ்ரா-வுக்கும் ஒரே மாதிரியான மன நிலை.”

“அதனால் ஏதவாக இருந்தாலும் அவரிடம் பேசுவது வழக்கம். கண்டிப்பாக புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டியது கடமை தான். இருப்பினும் பயிற்சியின் போது யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here