இந்த பவுலர் தான் இனி இந்திய அணியின் டெத் பவுலர் ; அதில் சந்தேகமில்லை , ஐபிஎல் வீரரை பற்றி பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர் ;

0

ஐபிஎல் 2022:

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி இதுவரை 62 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் 7 போட்டிகள் மட்டுமே உள்ளது, அதன்பின்னர் ப்ளே – ஆப் சுற்றுகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் நடைபெற தொடங்கினால் மற்ற வீரர்களை பற்றி அல்லது சிறப்பாக விளையாடும் வீரர்களை பற்றி பேசுவதை வழக்கமாக கொடுள்ளனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் கடவுள் என்று அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் ” இருதினங்களுக்கு முன்பு பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் பஞ்சாப் அணி 209 ரன்களை அடித்தது. ஆனால் அதற்கு மேல் அவர்களால் அடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அதுவும் இறுதி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்தார்.”

“நாளுக்கு நாள் அவரது பவுலிங்-ல் முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது.எனக்கு தெரிந்து இப்பொழுது இருக்கும் இந்திய வீரர்களில் இவர் தான் சிறந்த டெத் ஓவர் பவுலர். நிச்சியமாக இவருக்கான போட்டி கண்டிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.”

இந்த போட்டியில் ஹர்ஷல் பட்டேல் இறுதி ஓவர் பவுலிங் செய்தார். அதில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். எப்பொழுது இறுதி ஓவர் என்றால் அதிரடியான ஆட்டத்தை விளையாடுவது தான் வழக்கம். ஆனால் ஹர்ஷல் பட்டேல் வீசிய அருமையான பவுலிங்காள் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரன்களை அடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டியில் வென்று புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளனர். இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் அதில் உறுதியாக வெற்றி பெற வேண்டிய சூழல் பெங்களூர் அணிக்கு எழுந்துள்ளது.

டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணி இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?? கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இருக்குமா ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. அதனால் மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here