இது நடந்திருந்தால் வெற்றியை கைப்பற்றிருக்க முடியும் ; இப்படி விளையாடினால் எப்படி ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளனர்.

மூன்றாவது போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சேல் மார்ஷ் விக்கெட்டை இழந்த பின்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால், அதன்பின்பு அனைத்து வீரர்களும் குறைவான ரன்களை அடித்த காரணத்தால் 269 ரன்களை அடித்தனர். பின்பு 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது.

தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் எதுவும் அமையாத காரணத்தால் விக்கெட்டை தொடர்ச்சியாக இழந்து கொண்டே வந்தது இந்திய. இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி வெறும் 248 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வென்ற ஆஸ்திரேலியா அணி தொடரையும் வென்றுள்ளனர்.

தோல்வி பற்றி பேசிய ரோஹித் சர்மா :

“அவர்கள் (ஆஸ்திரேலியா) அடித்த ரன்கள் ஒன்று பெரியது கிடையாது. நாங்கள் பேட்டிங் சரியாக பண்ணவில்லை என்பது தான் முக்கியமான காரணம். அதுமட்டுமின்றி, எப்பொழுதும் பார்ட்னெர்ஷிப் தான் போட்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.”

“அதனை இன்று நாங்கள் தவறிவிட்டோம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஆனால் இந்த தொடர் எங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. இதில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேறி செல்ல போகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.’

தோல்விக்கான காரணம் என்ன ??