டாஸ் போட்ட பிறகும் கேப்டன்களால் ஒரு சில விஷயங்களை மாற்ற முடியும் ; பட்டைய கிளப்ப போகும் புதிய விதி முறை ;

ஒருவழியாக இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் நடந்து முடிந்தது. அதில் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஆஸ்திரேலியா அணியும் வென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 போட்டிகள் தொடங்க உள்ளது. வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று முதல் போட்டி நடைபெற இருப்பதால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிகள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி மே இறுதிவரை நடைபெற உள்ளது. அதனால் அனைத்து வீரர்களும் அவரவர் அணிகளில் இணைந்து சிறப்பாக பயிற்சி செய்து வருகின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீசன் நடந்து முடிந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4முறையும் கோப்பையை வென்றுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யார் சாம்பியன் படத்தை வெல்ல போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு டாடா ஐபிஎல் 2023ல் ஒரு சில முக்கியமான விதி முறையை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

  1. Wide மற்றும் நோ-பால் போன்ற விஷயங்களுக்கும் டிவி நடுவரிடம் கேட்டுக்கொள்ளலாம் .
  2. டாஸ் போடும் போது கேப்டன்கள் இரு ப்ளேயிங் 11 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். டாஸ்-க்கு ஏற்ப உறுதியான அணியை அறிவிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால் இந்த விதிமுறைகள் நிச்சியமாக போட்டியை சுவாரஷியமாக கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் ? உங்களுக்கு பிடித்த அணி ஏது ?