அடுத்த போட்டியில் பாருங்க..! CSK அணிக்கு எதிராக இதை செய்தோம் ; ரோஹித் சர்மா பேட்டி

0

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை மிகவும் கவலையாக இருப்பது தான் உண்மை. ஏனென்றால், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து 6 போட்டிகளிலும் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த 14 சீசன்களில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால், அது சந்தேகம் தான். ஏனென்றால் இன்னும் 8 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், அவை அனைத்திலும் வெற்றி பெற்றால் கூட ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய அதிக வாய்ப்பு இருக்கும்.

வருகின்ற 21ஆம் தேதி அன்று ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். இந்த போட்டியை பற்றி பேசிய ரோஹித் சர்மா ; இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற தோல்வியை நான் பொறுப்பெடுத்து கொள்கிறேன்.”

“நாங்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடவில்லை. அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக ரசிகர்கள் நினைத்த படி விளையாடுவோம். செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் பார்த்து கொள்ள போகிறேன் என்றும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.”

நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் மும்பை அணிக்கு மட்டும் முக்கியமான போட்டி அல்ல, இனிவரும் போட்டிகள் அனைத்தும் சென்னை அணிக்கும் மிகவும் முக்கியமான ஒன்று தான். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர்…!

இதுவரை சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை அணி 19 முறையும், சென்னை அணி 13 முறையும் வென்றுள்ளது. இருப்பினும் இந்த முறை அணியில் பல மாற்றங்களுடன் விளையாடி வருவதால் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here