வீடியோ ; பவுண்டரி, Wide இல்லை ; ஆனால் ஒரு பந்தில் நான்கு ரன்களை அடித்த ஜோஸ் பட்லர் ; இதுவே முதல்முறையாக இருக்கும் ;

நேற்று மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஒரு போட்டி முடிவில்லாமல் ட்ரா ஆனது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் உருவானது. அதிலும் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 217 ரன்களை அடித்தது ராஜஸ்தான். அதில் ஜோஸ் பட்லர் 103, படிக்கல் 24, சாம்சன் 38, ஹெட்மயேர் 26, ரியன் பராக் 5 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான பின்ச், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இருவரும் போட்டியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இறுதியாக பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா.

அதில் பின்ச் 58, ஷ்ரேயாஸ் ஐயர் 85, நிதிஷ் ரானா 18, உமேஷ் யாதவ் 21 ரன்களை அடித்தனர். ஏனென்றால், இறுதி வரை போராடிய கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றுள்ளது. இதற்கிடையில், ஜோஸ் பட்லர் மற்றும் படிக்கல் செய்த செயல் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

முதலில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் படிக்கல் இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினார்கள். அப்பொழுது 2.5 ஒவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்தை எதிர்கொண்டார் ஜோஸ் பட்லர். அதனை அடித்த போது பவுண்டரி லைன் பக்கத்திற்கு சென்றது. ஆனால் அதனை வெங்கடேஷ் ஐயர் துல்லியமாக ஓடி அதனை தடுத்துவிட்டார்.

இருப்பினும் ஜோஸ் பட்லர் மற்றும் படிக்கல் ஆகிய இருவரும் அதிரடியாக ஓடி நான்கு ரன்களை கைப்பற்றினார்கள். எப்பொழுதும் ஒரு போட்டியின் தொடக்க என்றால் அதிகபட்சமாக மூன்று ரன்களை ஓடுவது தான் வழக்கம். ஆனால் இந்த முறை ஜோஸ் பட்லர் நான்கு ரன்களை அடித்தது பேசும் பொருளாக மாறியுள்ளது.