CSK அணிக்கு இன்னும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது ; ஆனால் இது நடக்க வேண்டும் ;

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கிய ஐபிஎல் 2022 இதுவரை வெற்றிகரமாக 30 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இந்த முறை புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மூன்றாவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், நான்காவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் உள்ளது. இந்த முறை சென்னை மற்றும் மும்பை புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளனர்.

இதுவரை அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெருமையை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டுமின்றி, இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது சிஎஸ்கே.

ஏனென்றால் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டியில் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை. இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். ரசிகர்களிடையே எழுந்த மிகப்பெரிய சந்தேகம், இன்னும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற வாய்ப்பு உள்ளதா ?? இல்லையா ??

ஏனென்றால் சென்னை அணிக்கு அதிக ரசிகர்களை உடையது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சென்னை அணிக்கு இன்னும் 8 போட்டிகள் மிதமுள்ளன, அதில் நிச்சியமாக சென்னை அணி 7 போட்டியில் ஆவது வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் இருந்தன. அதனால் 14 புள்ளிகள் இருந்தாலே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை, ஏனென்றால் இரு புதிய அணிகளை கொண்டு விளையாடிய வருகிறது ஐபிஎல் 2022.

நிச்சியமாக இனிவரும் போட்டிகள் சென்னை அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சென்னை அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால் போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக தான் உள்ளது.

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் 21 ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் நடைபெற உள்ள போட்டியில் விளையாட உள்ளனர். இதில் இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்று.

இந்த முறை சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!