கே.எல்.ராகுல் இல்லை ; இந்திய கிரிக்கெட் அணியில் இவர் இல்லாதது மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது ; ரோகித் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளனர்.

இருப்பினும் இன்று தொடங்கியுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும். அதனால் இந்திய கிரிக்கெட் அணி கவமனாக விளையாடி வருகின்றனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி 37 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 96 ரன்களை அடித்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 42* ரன்களை அடித்துள்ளார். வெறும் 2 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றிய இந்திய அணியின் பவுலர்கள் திணறுகின்றனர். இப்படியே விளையாடினால் நிச்சியமாக ஆஸ்திரேலியா அணியால் 300க்கு மேற்பட்ட ரன்களை அடிக்க முடியும்.

கடந்த போட்டியில் மோசமான நிலையில் தோல்வி பெற்றது இந்திய. அதற்கு முக்கியமான காரணம் பேட்டிங் தான். ஆமாம், தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணியால் பார்ட்னெர்ஷிப் செய்ய முடியவில்லை.

அதனால் போட்டியிலும் தோல்வியை கைப்பற்றியது. இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் அணியில் இவர் மிஸ் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.”

மேலும் இதனை பற்றி பேசிய ரோஹித் சர்மா ; “உண்மையிலும் நாங்கள் (இந்திய அணி) ரிஷாப் பண்ட் -ஐ மிஸ் செய்கிறோம். அதுவும் குறிப்பாக அவர் பேட்டிங் செய்து அதிரடியாக ரன்கள் அடிப்பதை என்று கூறியுள்ளார் ரோஹித்.”

ரிஷாப் பண்ட் -க்கு கடந்த மாதம் காரில் விபத்து ஏற்பட்டது. தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ரிஷாப் பண்ட் குறைந்தது 18 மாதங்கள் எந்த விதமான போட்டிகளிலும் விளையாட முடியாது என்று கூறியுள்ளனர். அதனால் 2024ஆம் ஆண்டு இறுதியில் தான் ரிஷாப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரீகர் பாரத் ஆகிய இருவரின் பங்களிப்பும் பெரிய அளவில் இல்லை. அதனால் ரிஷாப் பண்ட் இடம்பெற்றிந்தால் ஆறுதலாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.