கே.எல்.ராகுல் அணியில் இல்லாதது வேதனையாக இருக்கிறது ; முன்னாள் வீரர் ஓபன் டாக் ; யார் தெரியுமா ?

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்து மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற

நான்காவது போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ப்ளேயிங் 11 :

ரோஹித் சர்மா, விராட்கோலி, புஜாரா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமத் ஷமி, உமேஷ் யாதவ்.

கே.எல்.ராகுலின் பங்களிப்பு :

கடந்த சில போட்டிகளில் கே.எல்.ராகுலின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முதல் இரு போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை.

அதனால் எந்த அளவிற்கும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் இடையே எதிர்ப்பு எழுந்தது. அதனால் உடனடியாக துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுலை வெளியேற்றினார்கள். பின்பு அணியில் இருந்து வெளியேற்றினர்.

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பர் கூறுகையில் : “இது அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு நடக்க கூடிய ஒன்று தான். யார் தொடர்ச்சியாக ரன்களை அடிக்கிறார்கள் என்று சொல்லுங்க பார்க்கலாம்..! அப்படி யாரும் இருக்க மாட்டாங்க..”

“ஆனால் இதிலும் நல்லது தான். ஏனென்றால், காயம் ஏற்பட்டால் மட்டுமே துணிச்சலாக விளையாட முடியும். இருந்தாலும் 11 வீரர்கள் விளையாடி கொண்டு இருக்கும்போது 12வது வீரராக கையில் தண்ணீர் கொண்டு போல நிச்சியமாக அது காயமாக தான் இருக்கும்.”

“நீங்க யாருக்கும் உங்க திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நீங்க ஒரு அணியை வழிநடத்தி கொண்டு வரீங்க..! அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் 4, 5 சதம் அடித்துள்ளீர்கள். அப்படி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஐபிஎல் தொடரில் விளையாடி ரன்களை குவித்து மீண்டும் அணியில் வரலாம்.”

“அதற்காக ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் அடிப்பது முக்கியமானது இல்லை. 400 ரன்களை அடித்தாலும் அணிக்கு தேவையான நேரத்தில் உபயோகமாக இருக்க வேண்டும். இதுதான் மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here