இதை பற்றி பேச அவசியம் இல்லை ; இதனை பற்றி நானும் ஜடேஜாவும் பேசிவிட்டோம் ; தோனி ஓபன் டாக் ;

ஐபிஎல் 2022:

கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை 14ஆம் ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இப்பொழுது 15வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது ஐபிஎல் போட்டிகள்.

ஐபிஎல் ; சிஎஸ்கே அணியின் கேப்டன் ?

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றிகரமாக வழிநடத்தி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது சென்னை அணி. அதிலும் தோனி 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் விரையாவில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா வழிநடத்துவார் என்று சென்னை அணி அறிவித்தது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரவீந்திர ஜடேஜாவின் விளையாட்டு மிகவும் மோசமான நிலைக்கு சென்றார் ஜடேஜா.

ஆனால் மீண்டும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக தல கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

ஜடேஜா பற்றி பேசிய கேப்டன் தல தோனி ;

உண்மையிலும், கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு நன்கு தெரியும் சென்னை அணியை அவர் தான் வழிநடத்த போகிறார் என்று. அவருக்கு தெரியும், அதுமட்டுமின்றி, நல்ல ஒரு இடைவெளி இருந்தது. அவர் கேப்டனாக வழிநடத்திய முதல் 2 போட்டிகளில் நான் சில முடிவுகளை எடுக்கஉதவி செய்தேன்.”

“ஆனால் அதன்பின்னர், நான் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. அதனால் அப்படியே அவர் போக்குக்கு விட்டுவிட்டேன். ஏனென்றால் , நான் அவருக்கு உதவியாக இருந்து இறுதியில் கேப்டனாக இன்னொருவர் விளையாடினார் என்று யாரும் அவரை சோலா கூடாது என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.”

கிரிக்கெட் ரசிகர்களே…! நீங்க சொல்லுங்க..! ரவீந்திர ஜடேஜாவால் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்த முடியுமா ? இல்லையா ?? அப்படி இல்லையென்றால் யார் கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!