இவர் அணியில் இல்லாத காரணத்தால் எனக்கு பொறுப்பு அதிகமானது ; அதனால் தான் இதை செய்தேன் ; முகேஷ் சவுத்திரி ;

0

ஐபிஎல் 2022 :

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த பிரச்சனை இல்லாமல் 46 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதிலும் சென்னை அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளதா ?? இல்லையா ?? என்று கேட்டால் அது சந்தேகம் தான்.

சென்னை அணியின் விவரம் ;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற நிலையில் 9வது இடத்தில் உள்ளது. அதனால் இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கும்..!

தீபக் சஹாருக்கு சரியான மாற்றம் ;

சென்னை அணியின் முக்கியமான நாயகனாக வளம் வருகிறார் தீபக் சஹார். இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 14 கோடி விலை கொடுத்து கைபற்றயுள்ளது சென்னை அணி. ஆனால் காயம் ஏற்பட்ட காரணத்தால் ஐபிஎல் 2022யில் விளையாட முடியாத நிலை ஏறட்டுள்ளது.

ஆனால் தீபக் சஹாருக்கு பதிலாக முகேஷ் சவுத்திரி சிறப்பாக பவுலிங் செய்து சரியான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றி வருகிறார். இருப்பினும் அதிகமாக ரன்களை கொடுத்து வரும் நிலையில், நிச்சியமாக அதனை விரைவாக சரி செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் சவுத்திரி பேட்டி ;

சமீபத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்திரி அளித்த பேட்டியில் ; நேற்று நடந்த போட்டியில் முதல் 6 ஓவரில் எந்த விக்கெட்டை கைப்பற்றவில்லை. அதுமட்டுமின்றி, நான் ஒரு கேட்ச் -ஐ மிஸ் செய்துவிட்டேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.”

அதனை சரி செய்ய வேண்டுமென்று நன் ஆவலாக இருந்தேன். அதனால் சரியாக நான் 6வது ஓவர் இறுதியில் விக்கெட்டை கைப்பற்றியது எனக்கு சந்தோசமாக இருந்தது. அதுமட்டுமின்றி, இந்த போட்டியில் ப்ராவோ இல்லை. அதனால் எங்களுக்கான பொறுப்பு அதிகமானது.”

“எப்பொழுதும் ப்ராவோ எனக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார். நேற்று அவர் (ப்ராவோ ) என்னிடம் உனக்கு அணியில் பொறுப்பு என்பது மிகவும் அதிமாக உள்ளது, அதுமட்டுமின்றி அணியில் இருக்கும் ஆதரவை சரியாக பயன்படுத்திக்கொள்ள என்று என்னிடம் கூறினார்.”

“அதுமட்டுமின்றி, தோனி இறுதிநேரத்தில் என்னிடம் சரியாக பந்தை ஸ்டம்ப் பார்த்து வீசு என்று கூறினார், அதன்படி பவுலிங் செய்தேன் என்று கூறியுள்ளார் முகேஷ் சவுத்திரி.”

கிரிக்கெட் ரசிகர்களே..!சென்னைஅணிக்கு தீபக் சஹாருக்கு பதிலாக முகேஷ் சவுத்திரி அணியில் இருப்பது சரியா ?? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகின்றனர். அதனால் மறக்காமல் கீழே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here