ஐபிஎல் 2022 ;
ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மாதம் மார்ச் 26ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 47 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
அதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.
சென்னை அணியின் கேப்டன் சர்ச்சை :
ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து இதுவரை மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக அணியை வழிநடத்தி வந்துள்ளார். இதுவரை அவரது (தோனி) தலைமையிலான சென்னை அணி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் இரு நாட்களுக்கு முன்பு நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாகவும் ஜடேஜா தான் கேப்டன் என்ற தகவலும் வெளியானது.
ஆனால் 8 போட்டிகளில் ஜடேஜா தலைமையிலான சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் மற்றும் ஜடேஜாவின் உண்மையான விளையாட்டு கேப்டன் பதவி காரணமாக அது வெளியே தெரியாத காரணத்தாலும் மீண்டும் ஜடேஜாவுக்கு பதிலாக கேப்டனாக மாறியுள்ளார் தோனி.
தோனி இதனை பற்றி பேசியதில் ;
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. பின்பு தோனி கூறுகையில், ஜடேஜா தான் கேப்டன் என்பது அவருக்கு கடந்த ஆண்டு இறுதியில் தெரியும். அப்பொழுது தான் அவரது விளையாட்டை தெளிவாக விளையாட முடியும் என்று கூறினார் தோனி.
தோனி சொன்னது உண்மை போல தெரியவில்லை ; முன்னாள் வீரர் பேட்டி
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் ; “ஐயோ, ஆமாம் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக தான் உள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடங்கும் இரு தினங்களுக்கு முன்பு ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது, என்னை ஆச்சரியப்படுத்தியது.”
“தோனி சொன்னது போல கேப்டன் பதவியில் முன்பே விலக போவதாக தெரிந்திருந்தால், ஜடேஜா நிச்சியமாக மெகா ஏலத்தில் பங்கேற்று அணியை தேர்வு செய்திருக்க வேண்டும். அதனால் தோனி இறுதி நேரத்தில் பதவியில் இருந்து விலகியதால், நிச்சியமாக ஜடேஜாவை மெகா ஏலத்தின் போது ஆலோசனை அவரிடம் (ஜடேஜாவிடம்) நடந்திருக்காது.”
“ஐபிஎல் போட்டிகளில் மிகச்சிறந்த அணிகளுள் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். அனைத்து வீரர்களையும் சென்னை அணி சிறப்பாகவும் ஒரே மாதிரியும் வழிநடத்தி வருகின்றனர். அப்படி இருக்கும் நிலையில் இந்த மாதிரியான முடிவுகளை சரியாக கையாண்ட விதம் சரியாக இல்லை.”
“ஒருவேளை இது தோனியின் சொந்த முடிவாகவே இருக்கட்டும், ஜடேஜா நிச்சியமாக அணியின் நிர்வாகிகளுடன் பேசியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டு முதல் சில போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் சரியாகவே விளையாடவில்லை, இருப்பினும் அணி மற்றும் நிர்வாகம் முழுவதும் அவருக்கு ஆதரவாக இருந்தது.”
“அதேபோல, ஜடேஜாவை ஆதரித்திருக்க வேண்டும், அப்பொழுது தான் அவரால் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். கேப்டன் பத்தியில் இருந்து விலகிய பிறகு ஜடேஜா எந்த மாதிரியான மன நிலையில் விளையாட போகிறார் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.”
இர்பான் பதான் சொன்னது போல அணியில் சரியான பேச்சுவார்த்தை நடக்கவில்லையா ? தோனியை ஏன் மீண்டும் கேப்டனாக அறிவித்தது சென்னை அணி ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. அதனால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!