போட்டி 1: நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆசிய கோப்பை 2022 போட்டியில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
டாஸ் மற்றும் முதல் பேட்டிங் :
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு மோசமான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டு வந்த இலங்கை அணியால் ரன்களை அடிக்க முடியாமல் போனது.
இருப்பினும் ராஜபக்ச அதிரடியாக விளையாட தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமான ரன் – அவுட் ஆனதால் இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதனால் 19.4 ஓவர் வரை போராடிய இலங்கை அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் வெறும் 105 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் நிஸ்ஸங்க 3, மெண்டிஸ் 2, அசலாங்க 0, குணத்திலாக 17, ராஜபக்ச 38, கருணாரத்னே 31 ரன்களை அடித்தனர்.
ஆப்கானிஸ்தான் இலக்கு:
பின்பு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. அதில் தொடக்க வீரரான சாசய் மற்றும் குர்பஸ் ஆகிய இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரன்கள் குவித்தன. அதனால் 10.1 ஓவர் முடிவில் 106 ரன்களை அடித்த நிலையில் வெறும் 2 விக்கெட்டை மட்டுமே இழந்தனர்.
அதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி. அதில் சாசய் 37, குர்பஸ் 40, சட்ரன் 15 ரன்களை அடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் அட்டகாசமான பவுலிங் :
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சுலபமாக வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ஆப்கானிஸ்தான் பவுலர் பாரூக்கி தான் காரணம். ஆமாம், இலங்கை அணியின் தொடக்க வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் பாரூக்கி. அதனால் இலங்கை அணியால் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தனர்.
அதுமட்டுமின்றி, பாரூக்கி 3.4 ஓவர் பவுலிங் செய்து வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை முதல் போட்டியில் பாரூக்கி தான் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் படத்தை கைப்பற்றியுள்ளார். போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…!