போட்டிகளில் வெல்ல வேண்டுமென்றால் இதை செய்தால் போதும் ; இலங்கை கேப்டன் தசுன் ஷானக்க பேட்டி ;

முதல் போட்டி 1: நேற்று இரவு 7:30 மணியளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியும், முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டம் மிகவும் மோசமான ஆட்டம் ஏற்பட்டது. அதனால் பின்னடைவை சந்தித்த இலங்கை அணியால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த இலங்கை அணியால் வேறும் 105 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதில் அதிகபட்சமாக ராஜபக்ச 38, கருணாரத்னே 31 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். பின்பு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ரன்கள் விளாசினார்கள்.

அதனால் 10.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 106 ரன்களை அடித்தனர். அதில் சாசய் 37, குர்பஸ் 40 மற்றும் சட்ரன் 15 ரன்களை அடித்துள்ளனர். வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளனர். இலங்கை அணி தகுதி சுற்றுக்கு முன்னேறுமா என்பது சந்தேகம் தான். அடுத்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் அதிகப்படியான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் தகுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானக்க கூறுகையில் ; ” டாஸ் -ல் வெற்றி பெற்று முதலில் பவுலிங் செய்திருந்தால் கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கும். அதுவும் புதிதாக இரு இளம் வீரர்களை கொண்டு விளையாடியுள்ளோம். இந்த போட்டியில் சுழல் பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை.”

“இருப்பினும் எங்கள் அணியில் இருக்கும் உலக சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர். டி-20 போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அடுத்த போட்டியில் நாங்கள் நிச்சியமாக வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார் தசுன் ஷானக்க.”

இன்றைய (28 ஆகஸ்ட் 2022) போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இன்று நடைபெற உள்ள போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.