கடந்த 2019ஆம் ஆண்டிற்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வி ; முழு விவரம் இதோ ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளனர்.

மூன்றாவது போட்டியின் சுருக்கம் :

நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிர்பார்த்த படி தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

இருப்பினும் டிராவிஸ் மற்றும் மார்ஷ் விக்கெட் இழந்த பின்னர் ஆஸ்திரேலியா அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்தனர்.

அதனால் 49 ஓவர் வரை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 269 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 33, மார்ஷ் 47, வார்னர் 23, அலெக்ஸ் காரே 38, ஸ்டோனிஸ் 25 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. ஆமாம், விராட்கோலி-ஐ தவிர்த்து அனைத்து வீரர்களும் குறைவான ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 248 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனாள் 1 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணியை வென்றது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி.

இதில் விராட்கோலி 54, சுப்மன் கில் 37, ரோஹித் சர்மா 30, கே.எல்.ராகுல் 32, ஹர்டிக் பாண்டிய 40 ரன்களை அடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிக்கான தொடரை வென்ற நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடரை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்அணி ஹாம்-ல் விளையாடிய போட்டிகளில் கடந்த இருஆண்டுகளாகவே ஒரு முறை கூட தோல்வி பெறவில்லை. இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் தோல்வியை பெற்றுள்ளனர்.

இதற்கு ரோஹித் சர்மா கேப்டனாக விளையாடாதது தான் காரணம் ஆ ? அல்லது இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வது காரணம் ஆ? உங்கள் கருத்து என்ன ?