டக் மன்னனாக மாறிய அதிரடி வீரர் ; இனியும் இவருக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காது ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்று மதியம் 1:30 மணியளவில் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. பின்னர் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.

அதனால், 49 ஓவர் வரை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 269 ரன்களை அடித்தனர். அதனை அடுத்து 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

37 ஓவர் முடிந்த நிலையில் 195 ரன்களை அடித்துள்ளது இந்திய. இதில் ரோஹித் சர்மா 30, சுப்மன் கில் 37, விராட்கோலி 54, கே.எல்.ராகுல் 32, ஹர்டிக் பாண்டிய 29*, ரவீந்திர ஜடேஜா 6* ரன்களை அடித்துள்ளனர்.

மோசமான நிலையில் விக்கெட்டை இழந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் :

இந்திய அணியின் டி-20 போட்டிக்கான தொடரில் அதிரடியாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவின் பங்களிப்பு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான நிலையில் விக்கெட்டை இழந்து வருகிறார்.

அதுவும் இப்பொழுது நடைபெற்று வரும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய சூரியகுமார் யாதவ் ஒரு ரன்களை கூட அடிக்காமல் விக்கெட்டை இழந்தார்.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சூரியகுமார் யாதவை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பிறகு நிச்சியமாக ஒருநாள் போட்டிக்கான தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் சூர்யகுமார் யதாவிற்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான்.

அதுமட்டுமின்றி, இதுவரை இந்திய வீரர்களில் சூரியகுமார் யாதவ் மட்டுமே தொடர்ச்சியாக மூன்று (ஒரு தொடர்) டக் அவுட் ஆகியுள்ளார். சூரியகுமார் யதாவிற்கு பதிலாக யார் விளையாடினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன ?