வீடியோ ; தல தலதான் …! பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த செயல் வைரலானது..!

நேற்று மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற 22வது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் டூப்ளஸிஸ் வழக்கம்போல பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ருதுராஜ் மற்றும் மொயின் அலி இருவரும் ஆட்டம் இழந்த நிலையில் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. முதல் 10 ஓவர் முடிவில் சென்னை அணி 60 – 70 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

ஆனால் அதன்பின்னர், ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 216 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக உத்தப்பா 88, ஷிவம் துபே 95 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இமாலய இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி.

தொடக்கத்தில் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. இருப்பினும் வலுவான மிடில் ஆர்டர் இருந்த காரணத்தால் இரு ஓவர் வரை போராடிய பெங்களூர் அணி 193 ரன்களை அடித்தது. அதில் அதிகபட்சமாக அஹமத் 41, தினேஷ் கார்த்திக் 34 அடித்துள்ளனர்.

இதற்கிடையில், ஒருவேளை சென்னை அணி தோல்வி பெற்றிருந்தால் அதற்கு முக்கியமான காரணமாக இளம் வீரரான முகேஷ் இருந்திருப்பார். என்னதான் விராட்கோலி-யின் விக்கெட்டை கைப்பற்றிருந்தாலும், பீல்டிங் செய்ததில் மிகவும் மோசம் என்று தான் சொல்ல வேண்டும்.

பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியாக விளையாட தொடங்கினார்கள். அந்த நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றால் சென்னை அணிக்கு மிகவும் ஆபத்தாக மாறிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நேரங்களில் முகேஷ் இரு கேட்ச் -ஐ மிஸ் செய்தார்.

அதுவும் பிரபுதேசாய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றாமல் விட்டுவிட்டார். அதனால் சென்னை அணிக்கு நிச்சியமாக மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டது. பின்பு அஹமத் விக்கெட்டை கைப்பற்றிய சென்னை அணி, அதனை கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் முகேஷ் மேல் கோவப்படாமல் அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு நண்பன் போல தோனி பேசியது இணையத்தை கலக்கி வருகிறது.