இவர் இந்த மாதிரி வெறித்தனமாக பீல்டிங் செய்வார் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை ; ராபின் உத்தப்பா பேட்டி ;

ஐபிஎல் 22வது போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம்போல தொடக்கத்தில் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆமாம், ருதுராஜ் மற்றும் மொயின் அலி போன்ற இருவரும் தொடர்ந்து ஆட்டம் இழந்த நிலையில் சென்னை அணி முதல் 10 ஓவர் முடிவில் குறைவான ரன்களை மட்டுமே முடித்திருந்தது.

ஆனால், ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே போன்ற இருவரும் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 216 ரன்களை அடித்துள்ளது சென்னை. அதில் ராபின் உத்தப்பா 88, மொயின் அலி 3, ஷிவம் துபே 95 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. என்ன தான் தொடக்கத்தில் சரியாக பார்ட்னெர்ஷிப் அமையாமல் விக்கெட்டை இழந்து வந்தாலும், பின்பு அகமத், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களால் ரன்களை சரமாரியாக அடித்தது பெங்களூர் அணி.

இறுதி வரை போராடிய பெங்களூர் அணி 193 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தங்கள் அணி பெற்ற முதல் வெற்றியை பற்றி பேசிய ராபின் உத்தப்பா கூறுகையில் ;

“இன்னும் வரை என்னால் ராயுடு பிடித்த கேட்ச்-ஐ நம்பவே முடியவில்லை. பேட்டிங் பொறுத்தவரை நான் துபே ஒரு நிதானத்திற்கு வரட்டும் என்று பொறுமையாக இருந்தேன். பின்பு அவர் அதிரடியாக விளையாடினார். அதனால் நானும் அவருடன் சரியாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தேன்.”

“மேக்ஸ்வெல் அவரது மூன்றாவது ஓவர் பவுலிங் செய்ய வேண்டும் என்ற வந்த போது தான் நான், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடிக்க முடிந்தது. பின்பு நன்கு யோசித்த பிறகு நான் தூபேவிடம் ஒன்று சொன்னேன்.”

“அதில் நீ (துபே) சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடு, அதேபோல நான் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்கிறேன் என்று. அதுமட்டுமின்றி எங்கள் சென்னை அணியில் தீக்சஹானா சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். எங்கள் அணியில் சில வீரர்களுக்கு அடிபட்டுள்ளது, அதுமட்டுமின்றி தீபக் சஹார் அணியில் இல்லை என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.”