இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற போகும் தொடக்க வீரர் ; மகிழ்ச்சியில் ரசிகர்கள் ;

0

பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் பங்களாதேஷ் அணியும், டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும் வென்றுள்ளனர்.

அதனை அடுத்து ஜனவரி 3ஆம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது இந்திய. அதில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதற்கான அணியை பிசிசிஐ இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளன. அதில் எந்த எந்த வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு வாய்ப்பை இழக்க போகிறார் இந்திய அணியின் தொடக்க வீரர்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடரும் பிரச்சனை :

கடந்த ஆசிய கோப்பை, டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இருந்தே இந்திய அணியின் தொடக்க வீரருக்கான பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. அதில் இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் தொடக்க வீரராக விளையாடி வந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தால் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடக்க வீரராக விளையாடி வருகின்றனர்.

சமீப காலமாகவே கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு எந்த பயனும் கொடுப்பதில்லை. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் வெறும் 22, 23, 10, 2 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இஷான் கிஷான் தொடக்க வீரராக விளையாடி 200க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார். கே.எல்.ராகுலை காட்டிலும் இஷான் கிஷான் பங்களிப்பு அதிக அளவில் இருக்கிறது.

அதனால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் விளையாட போகும் கே.எல்.ராகுலுக்கு அதன்பின்னர் வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான இளம் வீரர்கள் பலர் இருக்கும் நிலையில் கே.எல்.ராகுலுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று விமர்சங்கள் எழுந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here