ஸ்டீபன் பிளெம்மிங் சொன்ன ஒரே காரணத்தால் தான் இவரை நாங்கள் எடுத்தோம் ; சென்னை அணியின் CEO ஓபன் டாக் ; யார் அது தெரியுமா ?

0

IPL : ஐசிசி தொடருக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பிடித்த போட்டியாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் திகழ்கிறது. 2008ஆம் ஆண்டில் தொடங்கிய டி-20 போட்டிக்கான தொடர் இதுவரை 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தான் ஐபிஎல் 2023 போட்டிக்கான மினி ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக யோசனை செய்து முக்கியமான வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

சென்னை அணி :

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. ஐபிஎல் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையில் சென்னை அணி நான்கு முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வீரர்களை தேர்வு செய்தாலும் சென்னை அணியால் இறுதியாக 9வது இடத்தில் இருந்தனர்.

அதனால் ஐபிஎல் 2023 போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சரியான வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி அதிகபட்சமாக 16.25 கோடி விலை கொடுத்து பென் ஸ்டோக்ஸ் -ஐ கைப்பற்றியுள்ளது சென்னை.

ஆனால் நியூஸிலாந்து வீரரான ஜேமிசன் -ஐ கைப்பற்றும் போது அனைத்து அணிகளுக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. அதனால் மற்ற அணிகளும் அவரை கைப்பற்ற முயற்சி செய்யவே கிடையாது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 1 கோடி விலைக்கு வாங்கியது. இவரை எதற்கு ஏலத்தில் எடுத்தீங்க ? என்று பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் கூறுகையில் : “பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியதால் தோனி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். கேப்டன்ஷி பற்றி கவலை வேண்டாம். அதற்கான வீரர் முன்பே அணியில் தான் இருக்கிறார். அதுமட்டுமின்றி ஜேமிசன்-ஐ மற்ற அணிகள் எடுக்காததற்கு முக்கியமான காரணம் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று நினைத்ததால் தான்.”

“நாங்களும் முன்பு யோசனை செய்தோம். ஆனால் ஜேமிசன்-க்கு காயம் சரியாகிவிட்டதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறினார். அதனால் தான் அவரை கைப்பற்றினோம். இப்பொழுது இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவாக தான் இருக்கிறது. அதனால் ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here