ஜடேஜா இல்லை ; தோனிக்கு பிறகு இவர் தான் சென்னை அணியின் கேப்டன் ; மறைமுகமாக சொன்ன CSK விஸ்வநாதன் ; ரசிகர்கள் மகிழ்ச்சி ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாக தான் ஐபிஎல் போட்டி திகழ்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 போட்டிகள் இதுவரை சுமார் 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து 16 சீசன் போட்டிக்கான மினி ஏலம் இரு தினங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலமாக அணியாக தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். ஆமாம், ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து கடந்த ஆண்டுவரை தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். ஆனால் 40 வயதான தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி கொண்டு வரும் தோனி எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சென்னை அணி உடனடியாக அடுத்த கேப்டனாக உருவாக்க வேண்டிய சூழலில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பு ரவீந்திர ஜடேஜா தான் புதிய கேப்டன் என்று அறிவித்தது சென்னை அணி.

ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது மற்றுமின்றி, அவரது தனிப்பட்ட விளையாட்டும் மோசமான நிலைக்கு போனது. அதனால் ஐபிஎல் 2022 இடையே மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார். மினி ஏலத்தில் கேப்டனை மனதில் வைத்து தான் சென்னை அணி வீரர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16.25 கோடி விலை கொடுத்து இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியது சென்னை.

ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் தான் அடுத்த கேப்டனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் ” உண்மையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. அவர் (பென் ஸ்டோக்ஸ்) போட்டியின் வெற்றியாளர் மட்டுமின்றி நல்ல ஒரு தலைவன். ஆனால் அடுத்த கேப்டன் யார் என்பது தோனியின் கையில் தான் இருக்கிறது.”

“ஒரு வெளிநாட்டு வீரர் கேப்டனாக இடம்பெற்றால் மற்ற வீரர்கள் இடம்பெறுவதில் பல சிக்கல்கள் இருக்கும். அதுமட்டுமின்றி, ஆல் – ரவுண்டர் கேப்டனாக இடம்பெற்றால் பல பிரச்சனை இருக்கிறது. ஆனால் எப்பொழுது ருதுராஜ் கெய்க்வாட்- ஐ மட்டும் நிராகரிக்கவே முடியாது என்று கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.”

தோனியை அடுத்து சென்னை அணியின் கேப்டனாக இளம் வீரரான ருதுராஜ் கெய்க் வாட் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார். அந்த சீசனில் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியவில்லை. இருந்தாலும், 2021 போட்டிக்கான தொடரில் அதிக ரன்களை அடித்த புள்ளிபட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார் ருதுராஜ். அதுமட்டுமின்றி, உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை, சையத் முஸ்தாக் அலி, விஜய் ஹசாரே போன்ற போட்டிகளில் பட்டைய கிளப்பி விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here