இதற்கு மேல் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவே கூடாது ; தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் உறுதி ;

0

ஐபிஎல் : ஐபிஎல் டி-20 போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சிறப்பாக அறிமுகம் ஆனது. பின்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 16வது சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த நிலையில் லக்னோ அணி முதல் இடத்திலும், குஜராத் அணி இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா அணி நான்காவது இடத்திலும் இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென்று அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்..

முதல் போட்டியில் தோல்வி பெற்றாலும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றியது சென்னை. அதனால் 2 போட்டிகளில் விளையாடிய 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது சென்னை.

இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

முதல் இரு போட்டிகளில் செய்த தவறை மீண்டும் செய்யுமா ? சென்னை அணி :

இந்த ஐபிஎல் தொடரில் பல விதிமுறைகள் அறிமுகம் ஆகியுள்ளது. அதில் ஒன்று தான் இம்பாக்ட் ப்ளேயர். இரு போட்டிகளிலும் ராயுடு-க்கு பதிலாக துஷார் பாண்டே தான் களமிறங்கி பவுலிங் செய்து வந்துள்ளார்.

ஆனால் அது சிறப்பாக நடந்ததா என்று கேட்டால் கிடையாது.. ஆமாம், துஷார் தேஷ்பாண்டே அதிகப்படியான Wide மற்றும் நோ-பால் வீசி ரன்களை விட்டுக்கொடுத்தார். அதனால் சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாகவும் அமைந்தது.

இருப்பினும் துஷார் பாண்டே-விற்கு மட்டும் ஏன் ? தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது என்று பல கேள்விகள் எழுந்து வருகிறார். அதுமட்டுமின்றி, மும்பையில் விளையாட உள்ளதால் நிச்சியமாக தேஷ்பாண்டே-விற்கு பதிலாக சுழல் பந்து வீச்சாளருக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here