இவர் அணியில் இல்லையென்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் ; இருந்தாலும் சிறப்பாக விளையாடினோம் ; தோனி ஓபன் டாக் ;

போட்டி 12: நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற வென்ற சென்னை அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் நான்கு ஓவர்கள் சிறப்பாக அமைந்தது.

பின்பு தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் பார்ட்னெர்ஷிப் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. அதனால் இறுதி ஓவர் வரை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 157 ரன்களை அடித்தனர்.

அதில் ரோஹித் 21, இஷான் கிஷான் 32, கிறீன் 12, திலக் வர்மா 22, டிம் டேவிட் 31, ஹ்ரித்திக் ஷாக்கீன் 18* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி.

இதில் தொடக்க வீரரான டேவன் கான்வே எந்த விதமான ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். அதனால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் ரஹானே விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணிக்கு ரன்கள் குவிந்தது.

18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 159 ரன்களை அடித்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 40, ரஹானே 61, ஷிவம் துபே 28, அம்பதி ராயுடு 20* ரன்களை அடித்துள்ளனர். சென்னை அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கின்றனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி : “வெற்றிபெற்றது சிறந்த விஷயம் தான். இருந்தாலும் முதல் ஓவரில் தீபக் சஹாரை இழந்துவிட்டோம் (அவர் முதல் ஓவரில் இருந்தே அணியில் இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்). எங்களுக்கு தெரியும் மகளா ஒரு சிறந்த பவுலர் தான். 7வது ஓவருக்கு பின்பு சுழல் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது.”

“ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் நிச்சியமாக அழுத்தம் அதிகமாக தான் இருக்கும். அதில் மாற்றுக்கருத்தில்லை, இருப்பினும் துஷார் தேஷ்பாண்டே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாட அவரை அவரே தயார் செய்தும் வருகிறார்.”

“நானும் (தோனி) ரஹானேவும் பேசும்போது நான் சொன்னேன் , எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் விளையாடு. பீல்டிங் செய்யும் வீரர்களை குழப்பத்தில் வைத்திரு என்று சொன்னேன். அதேபோல சிறப்பாக விளையாடினார், இருப்பினும் அவர் விக்கெட் இழந்த விதம் அவருக்கு (ரஹானே) பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் தோனி”

சென்னை அணியின் பலம் என்ன ? பலவீனம் என்ன ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கபடுகிறது. மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பண்ணுங்க..!