அடுத்த போட்டி தான் தோனிக்கு இறுதி போட்டி ? Hint கொடுத்த தோனி ; சோகத்தில் ரசிகர்கள் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்கிய போட்டி இதுவரை 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும், லக்னோ அணி நான்காவது இடத்திலும் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான நிலையில் வெளியேறியது சென்னை. ஆனால் இந்த ஆண்டு சென்னை அணிக்கு பலமாக மாறியுள்ளது பேட்டிங். ஆமாம், அதுவும் தொடக்க வீரரான ரூட்டுராஜ் கெய்க்வாட் பங்களிப்பு சென்னை அணிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி பெற்றாலும் இரண்டாவது போட்டியில் சுமாரான வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆமாம், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் வெறித்தனமாக அமைந்தது. அதனால் 217 ரன்களை குவித்தனர் சென்னை வீரர்கள். ஆனால் பவுலிங் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் லக்னோ அணி 200-க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார்கள்.

இறுதி வரை போராடிய சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பவுலிங் தான். ஆமாம், அதிகமாக wide மற்றும் நோ-பால் வீசி ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர் சென்னை வீரர்கள். இதில் தீபக் சஹார் 5, துஷார் தேஷ்பாண்டே 4, மொயின் அலி 1,மற்றும் ராஜேவர்தன் ஹங்கர்கேகர் 1Wide வீசியுள்ளனர்.

அதுமட்டுமன்றி, துஷார் பாண்டே அதிகபட்சமாக மூன்று நோ-பால் வீசியுள்ளார். இதனை பார்த்த தோனி அவரது பொறுமையை இழந்தார். போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி சக வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதனால் வீரர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக மாறியுள்ளது.

ஆமாம், அதில் “இனிவரும் போட்டிகளில் நோ-பால் மற்றும் wide போன்ற விஷயங்கள் அதிகமாக இருக்கவே கூடாது. அப்படி நடந்தால் நீங்க புதிய கேப்டனுக்கு கீழ் விளையாட வேண்டிய சூழல் உருவாகும் என்று கூறியுள்ளார் தோனி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here