கபில் தேவுக்கு பிறகு அட்டகாசமாக பவுலிங் செய்தது இவர் மட்டுமே ; கடந்த 10 ஆண்டுகளில் இப்படி இல்லை ; முன்னாள் வீரர் புகழாரம் ;

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றியை பெற்றுள்ளனர். அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி தொடக்கத்தில் களமிறங்கியது இந்திய அணி.

இரு நாட்கள் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-ல் 574 ரன்களை அடித்த நிலையில் 8 விக்கெட்டை இழந்தது. அதில் ரவீந்திர ஜடேஜா 175 மற்றும் ரிஷாப் பண்ட் 96 போன்ற இருவரும் அதிகபட்சமாக ரன்களை அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இலங்கை அணி 174 ரன்களை மட்டுமே அடித்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 178 ரன்களை அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனார்கள். அதனால் இந்தியா கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாமல் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

போட்டியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இருவர் என்று சொல்லலாம். அதில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா 175 ரன்களை அடித்து, 9 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அவரை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களை அடித்து 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அளித்த பேட்டியில் ; கபில் தேவுக்கு அடுத்ததாக இவர் இல்லை, நான் ரவிச்சந்திரன் அஸ்வினை கபில் தேவிடம் ஒப்பிட்டு பேச ஆசைப்படுகிறேன். ஏனென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 5 போட்டியில் சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் வீசிய சுழல் பந்து தான் மிகவும் அருமையான ஒன்று. அதை போல நான் கடந்த 10 ஆண்டுகளாக பார்த்ததே இல்லை. அதில் முதலில் ஸ்டீவ் ஸ்மித், மரன்ஸ் லபுஸ்சாக்னே, மதேவ் வெட் போன்ற விக்கெட்டை கைப்பற்றினார் அஸ்வின்.

அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது. எனக்கல்லை தெரிந்து மற்ற எந்த சுழல் பந்து வீச்சாளரும் இப்படி பவுலிங் செய்ததே இல்லை. எனக்கு தெரிந்து கபில் தேவுக்கு பிறகு அஸ்வின் தான் இந்த அளவிற்கு பவுலிங் செய்வது.

35 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை மொத்தம் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 436 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்தும் வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.