ரவீந்திர ஜடேஜா இந்த மாதிரி செய்வார் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை ; ரவிச்சந்திரன் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மூன்று டி-20 போட்டிகளில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இப்பொழுது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாவது நாளில் 574 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை Declare செய்தனர்.

அதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 175 ரன்களையும், ரிஷாப் பண்ட் 96, ரவிச்சந்திரன் அஸ்வின் 61, ஹனுமா விஹாரி 58 போன்ற ரன்களை அடித்துள்ளார். பின்னர் முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கியது இலங்கை அணி. அதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 174 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தது.

இந்திய அணி அதிகபட்ச ரன்களான 574 அடித்த காரணத்தால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் இலங்கை அணியை முதல் பேட்டிங் செய்தனர். ஆனால் அதிலும் இலங்கை அணி 178 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தனர். அதனால் இந்திய கிரிக்ஸ்ட் அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாமல் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தான் உண்மை.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 175 ரன்களையும், பவுலிங் செய்து 9 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் 61 ரன்களையும் , 6 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனை பற்றி பேசிய இந்தியன் அணியின் முன்னாள் ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த பேட்டியில் ; கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் அவர் பல தடைகளை தாண்டி வந்துள்ளார்.

எனக்கு தெரிந்து ரவீந்திர ஜடேஜா இன்னும் சில வீரருக்கு முன்பு பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும். இப்பொழுது ரவீந்திர ஜடேஜாவின் ஒரு ஆடி மேல் உயர்ந்துள்ளது. அவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று நன்கு தெரியும். பவுலிங் செய்யம்போது தான் எங்களுக்கு புரிந்தது ஜெயந்த் யாதவ் அதிக அளவில் பவுலிங் செய்ய போவதில்லை என்று.

அப்பொழுது ஜடேஜா தான் அவருக்கு பதிலாக நான் அதிக ஓவர் பந்து வீச போவதாக முடிவு செய்தார். அதன்பின்னர் நானும் ஜெயந்த் யாதவத்துக்கு பதிலாக ஓவர் வீசினேன். ஏனென்றால் இந்தியா கிரிக்கெட் அணியில் இருப்பது மொத்தம் மூன்று சுழல் பந்து வீச்சாளர் தான்.

அதனால் தான் இந்த முடிவுகளை கையில் எடுத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here