17 வயதிலும் இவருடைய ஆட்டத்தில் வேகம் மற்றும் திறமையை நான் பார்த்தேன் ; முன்னாள் வீரர் சாந்து போர்டே பேட்டி ;

0

சமீபத்தில் தான் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட நிலையில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இந்திய அணி.

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கேப்டன் பற்றிய சர்ச்சை இப்பொழுது மிகப்பெரிய அளவில் இந்திய அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம், எப்பொழுது விராட்கோலி நான் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தாரோ. அதில் இருந்து தொடங்கியது சர்ச்சை.

பின்னர் விராட்கோலி முன்கூட்டியே அறிவிக்காமல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதிவியில் இருந்து வெளியேற்றியது பிசிசிஐ. அதனால் விராட்கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் கோவம் எழுந்தது. பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக வழிநடத்தி வந்தார் விராட்கோலி.

ஆனால் அதிலும் அவரால் தொடர்ந்து கேப்டனாக இருக்க முடியவில்லை. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 1 – 2 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் விராட்கோலி நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அது விராட்கோலி-க்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். அதனால் அவரை பற்றி முன்னாள் வீரர்கள் பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தேர்வு குழு உறுப்பினரான போர்டே கூறுகையில் ;

“விராட்கோலி 17, 18 வயது இருக்கும்போது அவருக்கு பயிற்சி கொடுக்க பிசிசிஐ என்னை அனுப்பியது. அதுதான் முதல் முறை பிசிசிஐ அப்படி செய்தது. அப்பொழுது விராட்கோலிடம் ஒரு வெறித்தனம் கிரிக்கெட் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது.”

“இப்பொழுது ஏதாவது அறிவுரை அவருக்கு கூறினால் அவர் அதனை கேட்டு பயிற்சியில் அவர் அதனை செய்து காட்டுவார்.இப்பொழுது யாரவது அறிவுரை கூறினால் அதனை முழுவதுமாக எடுத்துக்கொள்ள மாட்டார். அதில் என்ன சரியாக உள்ளது என்பதை பார்த்து பிறகு தான் முடிவு செய்வார் விராட்கோலி.”

“விராட்கோலி எப்பொழுதும் முன்னேறிக்கொண்டே போக தான் விரும்புவார். அதுமட்டுமின்றி ஒரே இடத்தில அவரால் இருக்க முடியாது. சின்ன வயதில் இருந்து அவரது விளையாட்டு மிகவும் அற்புதமாக மாறியுள்ளது. இந்திய அணியில் இருக்கும் சீனியர் ப்ளேயர்-களுக்கு மரியாதையை கொடுப்பார்.”

“அவர் (விராட்கோலி) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். அப்பொழுது அவர் என்னை வாழ்த்தினார். இப்பொழுது ஒருசிலர் வீரர்கள் தான் அவர்களுது முன்னாள் பயிற்சியாளர்களை மனதில் வைத்திருப்பார்கள். அதில் ஒருவர் தான் விராட்கோலி என்று புகழ்ந்து பேசியுள்ளார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here