நீண்ட நாட்கள் கழித்து டி-20 போட்டிக்கான இந்திய அணியில் களமிறங்க போகும் முக்கியமான வீரர் ; இனி தோல்வியே இல்லை ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய.

இன்றைய போட்டி நிச்சியமாக இந்திய அணிக்கு முக்கியமில்லை. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றால் அது ஆறுதல் வெற்றியாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்று இரவு 7 மணியளவில் போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைத்தனத்தில் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமை தாங்கி வழிநடத்த போகிறார். அதுமட்டுமின்றி, இதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பைக்கான போட்டியில் தான் விளையாடும்.

அதனால் முடிந்தவரை சரியான வீரர்களை வைத்து அனைத்து விதமான முயற்சிகளையும் இந்திய கிரிக்கெட் அணி மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்திய அணியின் தொடக்க வீரர் யார் யார் என்பதில் இப்பொழுது மிகப்பெரிய குழப்பமே எழுந்துள்ளது.

ஆமாம், கடந்த சில போட்டிகளாகவே ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரரான இஷான் கிஷான் ஆகிய இருவரும் தான் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்தனர். ஆனால் இஷான் கிஷான் ஒரு இளம் வீரர் என்றதால் அவரது விளையாட்டு இந்திய அணிக்கு பயனில்லாமல் போனது தான் உண்மை.

சில நாட்களாகவே கே.எல்.ராகுலு காயம் ஏற்பட்டது. அதனால் வாரம் சரியாக விளையாட முடியாமல் இருந்தார். ஆனால், இப்பொழுது அவர் காயம் சரியாகிய நிலையில் இனிவரும் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதுமட்டுமின்றி நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் கே.எல்.ராகுல் விளையாட போவதாக தெரிகிறது.

அப்படி இருக்கும் நிலையில் நிச்சியமாக இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை உருவாக்குவதை விட இனிவரும் போட்டிகளில் கே.எல்.ராகுல் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே உலககோப்பை மற்றும் ஆசிய கோப்பை போன்ற விளையாட்டில் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்திய அணியின் தொடக்க வீரராகவும் ரோஹித் ஷர்மாவுடம் பார்ட்னெர்ஷிப் செய்ய யாருக்கு சரியான திறன் உள்ளது ? இஷான் கிஷான் அல்லது கே.எல். ராகுல் ..! இதில் யார் தொடக்க வீரராக விளையாடினால் சிறப்பாக இருக்கும் ?