இந்த இருவரும் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் ; பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேட்டி;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த போட்டியில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

நாளை மறுநாள் நாள் முதல் ஐந்து டி-20 போட்டிகளில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட உள்ளனர். அதுமட்டுமின்றி, இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியில் விளையாட போகும் வீரர்களை வைத்து தான் போட்டிகள் நடைபெறும்.

ஏனென்றால், இன்னும் இரு மாதங்கள் மட்டுமே மீதமுள்ளது நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் இடப்பட்டு வருகின்றனர். இந்த முறை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வழிநடத்த உள்ளனர்.

இருப்பினும் 21 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் அதிகமாகவே உள்ளது. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் ; ‘” உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் மற்றும் அர்ஷதீப் சிங் இடம்பெற வேண்டும்.”

“இந்தாண்டு உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, நடராஜன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் தான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அங்கு சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் நடராஜன். அதனால் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றால் உலகக்கோப்பை போட்டிக்கு நிச்சியமாக அது உதவியாக இருக்கும்.”

“அதுமட்டுமின்றி இளம் வீரரான அர்ஷதீப் சிங் சிறப்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். ஆனால் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு கிடைப்பது இல்லை. நிச்சியமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இடம் கிடைத்தால் விக்கெட்டை கைப்பற்றுவார் என்று கூறியுள்ளார் டேனிஷ்.”

ஐபிஎல் 2020போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆன நடராஜன் சிறப்பான பந்து வீச்சால் யாக்கர் மன்னன் என்ற படத்தை பெற்றார். ஆனால் ஒரு சில போட்டிகளில் விளையாடிய நிலையில் இப்பொழுது இந்திய அணியில் விளையாட வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது..! என்பது தன உண்மை.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here