இதை வைத்துதான் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியும் ; சிஎஸ்கே உரிமையாளர் பேட்டி ; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரே விளையாட்டு என்றால் அது ஐபிஎல் போட்டி தான். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 ஐபிஎல் லீக் போட்டிகள் அறிமுகம் ஆனது. பின்னர், கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்று இப்பொழுது சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தான் சிஎஸ்கே அணிக்கு மிகவும் மோசமான அணியாக இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதுவும் கடந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே – ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. பின்னர் , தோனி கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் நாங்கள் நிச்சியமாக கம்பேக் கொடுப்போம் என்று கூறினார்.

அதேபோல, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் முதல் அணியாக ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதியாக கோப்பையையும் வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை தோனி தான் தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ளது சிஎஸ்கே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. பின்னர் இப்பொழுது எப்போ தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கேள்வி எழுகிறது. அதற்கு பதிலளித்த சிஎஸ்கே உரிமையாளர் இன்னும் சில ஆண்டுகள் நிச்சியமாக தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார். அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆக உள்ளது.

அதனால் மெகா ஏலம் நடைபெறும். அதனால் ஐபிஎல் போட்டிகளில் இருக்கும் அணிகளில் வீரர்கள் மாற்றமாக அதிக வாய்ப்பு உள்ளது. இதனை பற்றி பேசிய சிஎஸ்கே அணியின் உரிமையாளர், தோனி அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் எங்களுக்கு பிசிசிஐ, எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று தெரியவரும். அதன் பிறகு தான் சிஎஸ்கே வீரர்கள் யார் யார் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது தெரியவரும்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here