பாகிஸ்தான் அணி இதை செய்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு ஆபத்து தான் ; சோயிப் அக்தர் பேட்டி ; முழு விவரம் இதோ ;

ஐசிசி டி-20 உலகக்கோப்பை : கடந்த 17ஆம் தேதி அன்று உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பித்துள்ளது. அதனை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர். இந்த முறை உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெற வேண்டியது.

ஆனால் கொரோனா காரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்திலும் மற்றும் ஓமன் நாட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு முக்கியமான ஒன்று. ஏனென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த முறை இந்திய அணிக்கு ஆலோசகராக உள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலகக்கோப்பை 2021 டி-20 பிறகு விராட்கோலி டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போகிறார். அதனை அவரே அதிகார்வப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் விராட்கோலி. இதுவரை இந்திய அணி, ஒரு முறை மட்டும் மட்டுமே டி-20 கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர் பட்டியல் : விராட்கோலி, ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் போட்டி வருகின்ற 24ஆம் தேதி தான். அதுவும் முதல் போட்டி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கோட்னு இருக்கின்றனர். அதிலும் சில ரசிகர்கள் உலகக்கோப்பை கைப்பற்றுவதை விட, பாகிஸ்தான் அணியை வென்றே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் ; பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கு இடையேயான போட்டியை பற்றி பேசியுள்ளார். அதில் ” ஒருவேளை பாகிஸ்தான் அணி 170 அல்லது 180 ரன்கள் அடித்துவிட்டால், இந்திய அணிக்கு மிகவும் ஆபத்துதான்.

இது ஒன்றும் ஐபிஎல் போட்டிகள் இல்லை, இது உலகக்கோப்பை போட்டி என்று கூறியுள்ளார் சோயிப் அக்தர். இவர் (சோயிப் அக்தர்) சொல்வது வேடிக்கையாக தான் இருக்கிறது. ஏனென்றால் கடந்த இரு மாதங்களாக இந்திய அணி வீரர்களுக்கு ஐக்கிய அரபு நாட்டில் விளையாடிய அனுபவம் அதிகம் உள்ளது.

அதனால் எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று நன்கு தெரியும். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு அப்படி கிடையாது. அவர்கள் இப்பொழுது தான் ஐக்கிய அரபு நாட்டில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். நாளை மறுநாள் நடக்க போகும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

முதல் போட்டியில் யார் வெற்றிபெற போகிறார்கள் ?? பாகிஸ்தான் அணியா அல்லது இந்திய அணியா ?? என்பதை COMMENTS பண்ணுங்க….!!!!