ஹார்டிக் பாண்டியாவை எதிர்பார்க்க கூடாது..! விராட்கோலி தான் இதை செய்ய வேண்டும் ; வேறு வழியில்லை ; ஆகாஷ் சோப்ரா ; முழு விவரம் இதோ ;;

0

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் முக்கியமான போட்டிகள் அதாவது சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இன்னும் தொடங்கவில்லை. அதுமட்டுமின்றி, இந்திய அணிக்கு வருகின்ற 24ஆம் தேதி தான் முதல் போட்டி நடைபெற உள்ளது.

அதில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகிறது. அதனால் நிச்சியமாக விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி, நிச்சியமாக அதிக கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டிகள் தொடங்கியதால், யார் கோப்பையை வெல்ல போகிறார்கள், யார் அதிக ரன்களை அடிக்க போகிறார்கள் என்று அவரவர் கருத்துக்களை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் ; ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்வாரா இல்லையா ?? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் ஹார்டிக் பாண்டிய இல்லாமல் ஐந்து பவுலர்கள் உள்ளனர்.

ஆனால் 6வது பவுலிங் செய்ய ஆட்கள் இல்லாமல் போய்விடும். அதனால் 2016ல் எப்படி விராட்கோலி பவுலிங் செய்தாரோ..! அதேபோல தான் இந்த முறையும் விராட்கோலி பவுலிங் செய்யும் நிலைமை ஏற்படலாம். 6 பவுலர்கள் இல்லாதது தான் இந்திய அணிக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா….!!!

இந்திய அணியின் விவரம் :

விராட்கோலி, ரோஹித் சர்மா, வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், இஷான் கிஷான், ஷர்டுல் தாகூர், ஹார்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், கே.எல்.ராகுல், முகமது ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த முறை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரரான மகேந்திர சிங் தோனி ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ. விராட்கோலி, ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகிய மூவரும் நீண்ட நாட்கள் கழித்து இந்த உலகக்கோப்பை 2021 டி-20 போட்டியில் இணைந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஐசிசி டி-20 2021 உலகக்கோப்பையை இந்திய அணி வெற்றிபெறுமா ?? இல்லையா ?? என்று உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க…!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here