வெங்கடேஷ் ஐயர் இடம்பெற்றதால் வாய்ப்பை இழக்க போகும் நம்ம ஆல் ரவுண்டர் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகின்றனர்.

அதில் ஒருவர் தான் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய. ஆமாம்… ! கடந்த ஆண்டுக்கு முன்பு ஹார்டிக் பாண்டியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டது. அதன்பிறகு ஹார்டிக் பாண்டியவால் சரியாக பேட்டிங் மற்றும் பவுலிங் எதுவும் செய்ய முடியவில்லை.

இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றார் ஹார்டிக் பாண்டிய. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடியுள்ளது.

அணி தேர்வு செய்யும்போது ஹார்டிக் பாண்டிய தானாகவே முன்வந்து நான் என்னுடைய பவுலிங் திறனை மீட்ட பிறகு என்னை அணியில் தேர்வு செய்யுங்கள். அதுவரை வேண்டாம் என்று ஹார்டிக் பாண்டியவே கூறியுள்ளார். அதனால் தான் இன்னும் ஹார்டிக் பாண்டிய எந்த போட்டியிலும் விளையாடாமல் வருகிறார்.

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. சமீப காலமாக ஹார்டிக் பாண்டிய இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவது இல்லை.

அந்த இடத்தில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர்கள் இருவரில் ஒருவர் தான் விளையாட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன், இருவரும் விளையாடினால் சிறப்பாக தான் இருக்கும். ஆனால் இருவரும் விளையாடினால் தலா 2 ஓவர் மட்டுமே பவுலிங் கிடைக்கும்.

இப்பொழுதெல்லாம் இந்திய அணியின் 6 மற்றும் 7வது இடத்தை பார்த்தால் இந்திய அணி வலுவாக இருப்பது போல தான் தெரிகிறது. இப்பொழுதெல்லாம் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறிக்கொண்டு வருகிறார் என்பதே உண்மை.

ஒருவேளை ஹார்டிக் பாண்டிய மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினால் வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார் என்று இந்திய அணி சொல்லாது. ஆனால் என்னை பொறுத்தவரை இவர்கள் இருவரும் விளையாட வேண்டும், அதுவும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறன் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.