சவுத் ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இவர் கேப்டனாக இருந்திருக்கலாம் ; கடுப்பான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ;

0

ஒருவழியாக வருகின்ற மே 29ஆம் தேதி அன்று அஹமதாபாத் -ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறை யார் கோப்பையை வெல்ல போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இதனையடுத்து இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் நடைபெற உள்ளன.

வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தென்னாபிரிக்கா மற்றும் இந்திய எதிரான முதல் டி-20 போட்டிகள் நடைபெற உள்ளனர். சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் முக்கியமான வீரர்கள் பலர் இந்த முறை அணியில் இல்லை.

விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, முகமத் ஷமி போன்ற வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் ஒரு சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் டி-20 விவரம்:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹார்டிக் பாண்டிய, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் , ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான், அர்ஷதீப் சிங் மற்றும் உம்ரன் மலிக் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

கேப்டன் தேர்வு செய்தது சரியா ??

இந்திய ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்று பயணம் செய்து விளையாடியது. அதில் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடந்தது. ஆனால் அதில் விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வெறும் 1 போட்டிகளில் மட்டுமே வென்றது.

பின்பு கே.எல்.ராகுல் தலைமையிலான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விளையாடிய அனைத்து மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது தான் உண்மை. ஜூன் 9ஆம் தேதி தொடங்க உள்ள தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

ஏனென்றால் ரோஹித் சர்மா, விராட்கோலி, ஷமி, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ. ஆனால் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் ..! இந்திய அணியை வழிநடத்துவதும் ஒன்ற ?

பல மாதங்களுக்கு பிறகு சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார் ஹார்டிக் பாண்டிய. அதுமட்டுமின்றி, ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு அணியை சிறப்பாக வழிநடத்த ஹார்டிக் பாண்டிய சிறந்த வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் இந்திய அணி தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்தால் கேப்டன் பதவியை கே.எல்.ராகுல் மறந்துவிட வேண்டிய சூழல் மாறும்.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க ரோஹித் சர்மா இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை நியமனம் செய்தது சரியா ?? இந்திய அணியின் கேப்டனாக யார் இருந்திருக்க வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here