திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றது சந்தோசமாக உள்ளது ; தமிழக வீரர் நெகிழ்ச்சி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 இறுதி போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த முறை அறிமுகம் ஆகியுள்ள லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதனால் இந்த முறை யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் போட்டிகள் முடிந்த சில நாட்களில் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்து டி-20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.

அதற்கான இந்திய அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்தது. அதில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா போன்ற வீரர்கள் அணியில் இல்லை. அவருக்கு சில போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது தான் உண்மை. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடியுள்ளார் என்பது தான் உண்மை.

14 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 287 ரன்களை அடித்துள்ளார். அதிலும் 66 ரன்களை அதிகபட்சமாக ஆட்டம் இழக்காமல் கைப்பற்றியுள்ளார் என்பது தான் உண்மை. பெங்களூர் அணிக்கு சிறப்பான பினிஷர் என்ற படத்தை வென்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.

இதனால் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகளில் விளையாட தினேஷ் கார்த்திகை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. இதனை பற்றி பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் ; “நான் இப்பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளேன். இதுதான் எனக்கு மிகவும் முக்கியமான கம்பேக்.”

“அதுமட்டுமின்றி, பல கிரிக்கெட் ரசிகர்கள் நான் விளையாட வேண்டும் என்று கூறியது எனக்கு ஆறுதலாக இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் பெங்களூர் அணியில் எனக்கு என்ன வேலை என்பதை தெளிவாக கூறியது தான். நான் பெங்களூர் அணியில் இடம்பெற்றதை வைத்து நான் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவன இல்லையா என்று பல குழப்பங்கள் என்னிடம் இருந்தது தான் உண்மை.”

“ஆனால் அவர்கள் (பெங்களூர்) அணி என்மேல் வைத்த நம்பிக்கை தான் முக்கியமான காரணம். நான் இப்பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக். இந்திய அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக்-க்கு வாழ்த்துக்கள்.. !

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க நம்ம தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றதை பற்றி உங்களது கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!