இவரது பேட்டிங் மிகவும் ஆபத்தான ஒன்று ; இந்திய அணியில் இவர் இருந்தால் உலகக்கோப்பை வென்றுவிடாமல் ; மேத்யூ ஹேடன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி :

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் போதுமான ஒன்று.

யார் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் அல்லது பவுலிங் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்புகள் கூட அமையும் என்பது தான் உண்மை.

ஐபிஎல் 2022:

ஒருவழியாக ஐபிஎல் 2022 போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் இதுவரை லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளன. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது…!

டி-20 உலகக்கோப்பை 2023:

இந்த ஆண்டு இறுதியில் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகின்றனர் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் யார் எப்படி விளையாடி உள்ளனர், என்பதை பார்த்து தான் வாய்ப்புகள் வழங்கப்படும்.

இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹேடன் கூறுகையில் ; ” எனக்கு தெரிந்து இவரது பேட்டிங் மிகவும் ஆபத்தாக ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக உலகக்கோப்பையை வெல்ல கூட முடியும்.”

“சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாடிய ராகுல் த்ரிபதி பற்றி பேசிய ஹேடன். அவர் அணியில் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவது மிகவும் சிறந்த விஷயம். அணியை முன்னேற்றி கொண்டு செல்வது மிகவும் முக்கியமான ஒன்று.”

“எனக்கு தெரிந்து இனிவரும் களங்களில் அவர் (ராகுல்) மட்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அவரது முயற்சி மிகவும் அருமையாக இருக்கும்.” ஷார்ட் பிட்ச் பவுலிங்-கில் மிகவும் சிறப்பாக விளையாடி என்னை கவர்ந்துவிட்டார். நிச்சயமாக பவுலர்களுக்கு ஆபத்தான பேட்ஸ்மேன் தான் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் ஹேடன்.”

14 போட்டிகளில் 413 ரன்களை அடித்துள்ளார் ராகுல் த்ரிபதி,அதில் அதிகபட்சமாக 76 ரன்களை அடித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் ?

உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. அதனால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!