இந்திய அணியின் இவரது பேட்டிங் என்பது மிகவும் முக்கியமான ஒன்று ; அதனால் தான் இப்படி செய்தேன் ; ரோஹித் சர்மா பேட்டி ;

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ்- விளையாடாமல் 222 ரன்களை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் ரவீந்திர ஜடேஜா தான். பேட்டிங் செய்த ஜடேஜா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 175 ரன்களை அடித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாளில் 574 ரன்களை அடித்த நிலையில் Declare செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணி வெறும் 174 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் முதலில் களமிறங்கிய இலங்கை அணி , அதிலும் எதிர்ப்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை.

அதிலும் இலங்கை அணி 178 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். அதனால் இலங்கை அணி இரு இன்னிங்ஸ்- விளையாடி மொத்தமாக 352 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட நிலையில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “ரவீந்திர ஜடேஜாவின் பவுலிங் மற்றும் பீல்டிங் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் ரவீந்திர ஜடேஜா இன்னும் நிறைய போட்டிகளில் அதிக முறை பேட்டிங் செய்ய வேண்டும்.”

“என்னை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா தான் சிறந்த ஆல் ரவுண்டர். அவரது விளையாட்டு அப்படி. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா மொத்தம் 175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் சரியான நேரத்தில் விளையாடி ரன்களை அடிப்பது மட்டுமின்றி பவுலிங் செய்து முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அதேபோல தான் ஜடேஜா இப்பொழுதும் சிபிராக விளையாடி வருகிறார். அவர் ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடும் விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று. அவரிடம் அதிகப்படியான ஆர்வத்தை நான் பார்த்து வருகிறேன். அந்த ஆர்வம் தான் ஒரு விளையாட்டு வீரரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்” என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

மேலும் ரவீந்திர ஜடேஜாவின் பவுலிங் பற்றி பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; “நானும் ஜடேஜாவும் அடிக்கடி பேசுவது வழக்கம். அதில் நான் அவரிடம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டான். ரவீந்திர ஜடேஜா அதற்கு சரி என்று சொன்னதால் தான் முதல் டி-20 போட்டியில் 4வதாக விளையாட வைத்தோம் என்று கூறியுள்ளார் ரோஹித்.”