இவருடைய பவுலிங் வேற லெவல் ; தோல்விக்கு இதுதான் காரணம் ; ரவீந்திர ஜடேஜா பேட்டி ;

போட்டி 1: நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் டி-20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. ருதுராஜ் மற்றும் கான்வே போன்ற இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர்.

பின்னர் ராபின் உத்தப்பா மற்றும் அம்பதி ராயுடு போன்ற இரு வீரர்களும் பார்ட்னெர்ஷிப் உருவாக்கி கொண்டு வரும் நேரத்தில் தான் ராபின் உத்தப்பா ஸ்டம்ப் -ஹிட் ஆனார். பின்னர் இறுதிவரை ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 131 ரன்களை அடித்தனர். அதில் ருதுராஜ் 0, டேவன் கான்வே 3, ராபின் உத்தப்பா 28, அம்பதி ராயுடு 15, ரவீந்திர ஜடேஜா 26, சிவம் துபே 3, மகேந்திர சிங் தோனி 50 ரன்களை அடித்துள்ளனர். 132 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான ரஹானே ரன்களை அடித்த காரணத்தால் பின் வரும் வீரர்களுக்கு எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி அனைத்து வீரர்களும் குறைந்தது 20 ரன்களை அடித்துள்ளனர். இருப்பினும் 18.3 ஓவர் வரை போராடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

அதில் ரஹானே 44, வெங்கடேஷ் ஐயர் 16, நிதிஷ் ரானா 21, ஷ்ரேயாஸ் ஐயர் 20, சாம் பில்லிங்ஸ் 25 ரன்களை அடித்துள்ளனர். போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றிய பேசிய ரவீந்திர ஜடேஜா கூறுகையில் ; இந்த முறை போட்டியில் முக்கியமான ஒன்றாக பனி தான் காரணமாக உள்ளது.

ஒருவேளை நாங்கள் டாஸ் வென்றால் பவுலிங் தான் தேர்வு செய்திருப்போம். அதுமட்டுமின்றி, நாங்கள் பேட்டிங் செய்த முதல் 7 ஓவரில் பெரிய ரன்களை அடிக்கவில்லை, ஆனால் போக போக ரன்களை முடிந்த வரை அதிரடியாக விளையாடினோம். சென்னை அணியில் அனைவரும் சிறப்பாக தான் பவுலிங் செய்தனர்.

இருப்பினும் அதில் அருமையாக நேரத்தை புரிந்து கொண்டு பவுலிங் செய்தது ப்ராவோ தான் என்று கூறியுள்ளார் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா. சென்னை அணியின் தோல்வியின் காரணம் டாஸ் தான?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.!