இரண்டாவது போட்டியில் இரு முக்கியமான மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி ; மீண்டும் ஒரு ஆல் – ரவுண்டர் என்ட்ரி ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் ஒருநாள் போட்டிகள் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன் படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 188 ரன்களை அடித்தனர்.

பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் 39.5 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகின்றனர்.

போட்டிக்கு முன்பு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : “எப்பொழுது இந்திய அணிக்காக விளையாடினால் நிச்சியமாக அதில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும். அந்த மாதிரியான நேரங்களில் நிதானமாக தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.”

“அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் இரு மாற்றங்கள் நடந்துள்ளது. அதில் இஷான் கிஷனுக்கு பதிலாக நான் இடம்பெற்றுள்ளேன். ஷர்டுல் தாகூர்-க்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் இடம்பெற்றுள்ளார். முதலில் பவுலிங் செய்திருந்தால் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களை வைத்து ஏதாவது செய்திருக்க முடியும்.”

“இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் சுழல் பந்து வீச்சு சரியாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

இந்திய அணியின் ப்ளேயிங் 11 :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ்,முகமத் சிராஜ், ,முகமத் ஷமி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூன்று ஆல் – ரவுண்டர்களை (ரவீந்திர ஜடேஜா, ஹார்டிக் பாண்டிய, அக்சர் பட்டேல்) கொண்டு விளையாடுவது சரியான விஷயம் ஆ ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here