தம்பி..! நீங்க டி-20 போட்டிக்கு மட்டும் சரியா இருப்பிங்க ; ஒருநாள் போட்டி வேண்டாம் ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் விளையாடி வருகின்றனர்.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலி களமிறங்கி விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

இன்னும் 10 ஓவர் கூட முடியாத நிலையில் 4 விக்கெட்டை இழந்துள்ளது இந்திய. தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டு வருகிறது இந்திய. அதிலும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 13 ரன்களிலும், சுப்மன் கில் 0 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார்.

இவர் டி-20 போட்டிக்கு மட்டும் தான் சரியாக இருப்பாரோ :

32 வயதான சூரியகுமார் யாதவ் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைத்தது. மற்ற போட்டிகளை காட்டிலும் டி-20 போட்டிகளில் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி பல போட்டிகளில் வெல்ல காரணமாக இருந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

ஆனால் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடுகிறாரா என்று கேட்டால் சந்தேகம் தான். ஏனென்றால், சூரியகுமார் யாதவ் இறுதியாக விளையாடிய 0, 14, 0, 31, 4, 6, 34, 4, 8, 9 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

ஆனால் டி-20 போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் குறைந்தது 30 ரன்களை அடித்து வருகிறார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அப்படி விளையாடாத நிலையிலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

இவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூரியகுமார் யதாவுக்கு பதிலாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here