இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்த முடிந்த நிலையில் இரு அணிகளும் தல இரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர். இன்னும் மீதமுள்ள இறுதி போட்டியில் யார் வெற்றி பெருகிறார்களோ அந்த அணியே டி-20கான கோப்பையை கைப்பற்றும்.
நேற்று நடந்தமுடிந்த 4வது டி-20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பௌலிங் தேர்வு செய்தனர். இந்தியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினாலும் ரோஹித் சர்மா 12 ரன்களிலும் கே.எல்.ராகுல் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அதன் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் (அவரது முதல் டி-20 போட்டி) இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் 57 ரன்களை எடுத்துள்ளார். இந்தியா அணியின் கேப்டன் கோலி வெறும் ஒரு ரங்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் அனைத்து வீரர்களும் அவரவர் ஆட்டத்தை சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் இந்தியா அணி 185 ரன்களை எடுத்தது .
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஜேசன் ராய் 40 ரங்களிலும் , ஜோஸ் பட்லர் 9 ரங்களிலும், டேவிட் மாலன் 14 ரங்களிலும் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி இனி அவ்ளோதான் என்று நினைத்து கொண்டு இருந்த போது பென் ஸ்டோக்ஸ் 23 பந்தில் 46 ரன்களை விளாசினார்.
இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா அணி. இதனால் இருவரும் தல இரு போட்டிகளில் வெற்றி பெற்றதால் நாளை நடக்க உள்ள இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே டி-20கான கோப்பையை கைப்பற்றுவார்.
இந்த 4வது டி-20 போட்டி முடிந்த பிறகு முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் , 4வது டி-20 போட்டியில் சிறப்பிக்க விளையாடிய சூரியகுமார் யாதவ் , கடிக்க பாண்டிய, ரோஹித் சர்மா ஆகிய மூவரும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் இவருக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை, இது ஒன்று ஐபிஎல் போட்டிகள் இல்லை. எதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியையும் இந்தியா கிரிக்கெட் அணியை ஒப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கீர்கள் என்று சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. இவர் கடந்த 4 டி-20 போட்டிகளில் இந்த கருத்தை மட்டுமே பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.